"விட்டா போதும் தொட்டு விடுவேன்": தயார் நிலையில் ஆதித்யா எல்-1!
Oct 26, 2025, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“விட்டா போதும் தொட்டு விடுவேன்”: தயார் நிலையில் ஆதித்யா எல்-1!

Web Desk by Web Desk
Aug 30, 2023, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை நோக்கிய பயணத்தை தொடங்குவதற்காக, ஆதித்யா எல்-1 விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கும் இஸ்ரோ, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கி வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், அதே நேரத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தையும் உருவாக்கி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

இதைக் கண்டு உலக நாடுகள் மூக்கில் விரல் வைத்திருக்கும் நிலையில், அடுத்த அதிரடியாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவ தயாராகி விட்டது இஸ்ரோ.

செப்டம்பர் மாதம் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், சூரியனை நோக்கிய பயணத்தைத் தொடங்குவதற்காக ஆதித்யா எல்-1 தயாராக இருப்பதாகக் கூறியிருக்கும் இஸ்ரோ, புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

அப்புகைப்படத்தில் ஆதித்யா எல்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், தயார் நிலையில் இருக்கிறது. மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதவில், ஆதித்யா எல்-1 மிஷன் தொடர்பான உட்புற ஒத்திகைகள் எல்லாம் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்திருக்கிறது.

செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்-1, 4 மாதங்கள் சுமார் 15 லட்சம் கி.மீ. பயணத்திற்குப் பிறகு, சூரியன் – பூமி அமைப்பின் லாக்ராஞ்சியன் புள்ளி 1ஐ சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடியே, சூரியனின் செயல்பாடுகள், விண்வெளி வானிலையில் ஏற்படும் தாக்கம், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்யும்.

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியில் ஆதித்யா எல்-1 மீதான எதிர்ப்பார்ப்பு எகிறி இருக்கிறது.

Tags: aadithya l one
ShareTweetSendShare
Previous Post

இலங்கைக்கு 9 கோடி முட்டைகள்: இந்தியா ஏற்றுமதி!

Next Post

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies