இந்திய இரயில்வே வாரியத் தலைவர் மற்றும் சிஇஓ பதவிக்கு ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய இரயில்வே வாரியத்தின் தலைவராக பணியாற்றியவர் அனில் குமார் லகோதி. இவரது பதவிக் காலம், கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது. இருப்பினும், அவரது பதவிக்காலம், ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் அவரது பணிக்காலம் முடிவடைந்துவிட்டதால், அந்தப் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும். அதற்கு மத்திய அமைச்சவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த நிலையில், இந்திய இரயில்வே வாரியத் தலைவர் மற்றும் சிஇஓ பதவியில் ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற இவர், கடந்த 1988 -ம் ஆண்டு இந்திய இரயில் போக்குவரத்துப் பிரிவில் இணைந்து, பல்வேறு பிரிவுகளில் திறம்பட பணியாற்றி வருகிறார்.
ஜெயா வர்மா சின்ஹாவை, இந்திய இரயில்வே வாரியத் தலைவர் மற்றும் சிஇஓ பதவியில், நியமிக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய இரயில்வே வாரியத்தில், கடந்த 105 ஆண்டு கால வரலாற்றில், பெண் ஒருவர் வாரியத் தலைவராக நியமிப்பது இதுவே முதல்முறை.