"கொரோனா"வால் உயிரிழந்தவர்களில் ஆண்களே அதிகம்!
Aug 21, 2025, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“கொரோனா”வால் உயிரிழந்தவர்களில் ஆண்களே அதிகம்!

Web Desk by Web Desk
Sep 1, 2023, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரோனா பாதிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் கடந்த ஓராண்டுக்குள் இறந்தவர்களில் பெண்களைவிட ஆண்கள் அதிகம்  என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கை  தெரிவிக்கிறது .

நாட்டில் உள்ள 31 கொரோனா மருத்துவமனைகளில், கொரோனாவின்-3 தாக்கத்தின் போது  பாதிக்கப்பட்டு  சிகிச்சைப் பெற்று நோய் குணமாகி வீட்டுக்குத் திரும்பிய பின் உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் விவரங்களைப் பெற்று ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது.

“கொரோனா பெருந்தொற்றின்போது, பெண்களைவிட ஆண்களே கடுமையான நோய் பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைப்  பார்த்தோம். இவர்களில் பலர் இறப்புக்கு கரோனாதான் காரணம் என உறுதியாக கூற முடியாது. கொரோனா பாதிப்புக்குச் சிகிச்சை பெற்றவர்களின் இறப்புக்கு பல காரணங்கள் உள்ளன.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வெளியேறி ஓராண்டு நிறைவு செய்த 14,419 பேரை தொடர்பு கொண்டதில், 942 பேர் (6.5%) இறந்திருந்தனர். இவர்களில் 616 பேர் ஆண்கள். இவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களும், குறைவானது முதல் கடுமையான கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களே அதிகம்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் குறித்த ஆய்வு அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. அதில் கொரோனா பாதிப்புக்கு முன் தடுப்பூசி போட்டவர்கள் அதிகம் உயிரிழக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டது.

தடுப்பூசி செலுத்தியவர்கள் இறப்பு குறைவு என்பதை எங்கள் ஆய்வு உறுதி செய்கிறது. ஒரு முறை  தடுப்பூசி போட்டிருந்தாலும், அது ஓரளவு எதிர்ப்புச்  சக்தியை வழங்கியுள்ளது” என ஐசிஎம்ஆர் விஞ்ஞானி டாக்டர் அபர்னா முகர்ஜி கூறினார்.

மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் 2 ஆண்டுகள் கழித்தும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். கொரோனா பாதிப்பு நீண்ட காலம் உள்ளது உண்மை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகும் நீரிழிவு, நுரையீரல் பிரச்சினை,இரத்தம் உறைதல், உடல் சோர்வு, இரைப்பை பாதிப்பு, தசைவலிப்பு போன்ற நீண்டகால கொரோனா தொடர்பான பிரச்சினைகளைச் சந்திக்கும் அபாயம் உள்ளது என அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.

Tags: coroanaresearchprojectcovid19
ShareTweetSendShare
Previous Post

நீட் தேர்வில் 401 மதிப்பெண் பெற்ற மாணவி அக்க்ஷயா மகாலட்சுமி!

Next Post

“அமிர்த கலச யாத்திரை”

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies