இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த ஆசியான் இந்தியா மாநாட்டில், தீவு நாடான திமோர் லெஸ்டே தலைநகர் டிலி நகரில் தூதரகம் அமைக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று ஆசியான் இந்தியா மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியவை நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்தோனேஷிய பிரதமர் ஜோகோ விடோடோ விடுத்த அழைப்பின் பேரில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இம்மாநாட்டில்தான், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான திமோர்-லெஸ்டேவின் தலைநகர் டிலியில் இந்திய தூதரகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பாக்சி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் “ஜகார்த்தாவில் நடந்த ஆசியான் இந்தியா மாநாட்டில் திமோர் தலைநகர் டிலியில் தூதரகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆகவே, “டெல்லி முதல் டிலி” வரை இந்தியாவின் கிழக்குக் கொள்கை செயல்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், டிலியில் தூதரகத்தைத் திறப்பதற்கான முடிவு, ஆசியானுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தையும், திமோர் லெஸ்டே உடனான உறவையும் பிரதிபலிக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
Act East in action – Delhi to Dili!
At the ASEAN-India Summit in Jakarta, PM @narendramodi announces decision to open our Embassy in Dili, Timor-Leste. pic.twitter.com/uc905H7lxc
— Arindam Bagchi (@MEAIndia) September 7, 2023
திமோர்-லெஸ்டேவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய ஆரம்ப நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2002 மே மாதம் திமோரின் சுதந்திர தின கொண்டாட்டங்களில், அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமையிலான உயர்மட்டக் குழுவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. இராஜதந்திர உறவுகளை முறையாக நிறுவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2003 ஜனவரி 24-ம் தேதி கையெழுத்தானது. திமோர் லெஸ்டே 2022-ம் ஆண்டு ஆசியான் அமைப்பில் பார்வையாளராக சேர்ந்து, பின்னர் முழு உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது.