ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக கில் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். இதில் ருத்ராஜ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் பௌண்டரிகளாக அடித்து அசத்தினார்.
இதுவரை அவர் மொத்தமாக 11 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 90 பந்துகளில் 105 ரன்களை எடுத்து சீன் அபோட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக இந்தியா அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கியுள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 2 சதங்களை எடுத்திருந்த நிலையில் இது அவருக்கு 3 வது சதமாக அமைத்தது. காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு அவர் பதிவு செய்த முதல் சதம் இதுவாகும்.