2023 ஆசியக் கோப்பைத் தொடரின் போது, விராட் கோலி தனது 47வது ஒருநாள் சதத்தை அடித்தார். இதன் மூலம் அவரது ஒட்டுமொத்த சதங்களின் எண்ணிக்கை 77 ஆகா உயர்ந்தது. சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களும் டெஸ்ட் போட்டியில் 51 சதங்களும் மொத்தமாக 100 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி சச்சினின் பல சாதனைகளை முறியடித்துள்ளார். இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் அடித்த சதங்களின் சாதனையை அவரால் நெருங்க முடியவில்லை.
இந்நிலையில் டி வில்லியர்ஸ் தனது யூ டியூப்பில், விராட் கோலி யாருடைய சாதனைகளையும் முறியடிக்க விளையாடவில்லை. அவர் தனக்காகவும் விளையாடவில்லை. அவர் தனது அணியின் வெற்றிக்காக தான் விளையாடி வருகிறார். மேலும் அவர் இந்த உலகக்கோப்பையைத் தனது அணிக்காக வெல்ல விரும்புகிறார். அவர் ஒரு டீம் பிளேயர் என்பதை அவர் விளையாடிய பல போட்டிகளில் நீங்கள் பாத்திருப்பீர்கள். பேட்டிங் மட்டும் இல்லாமல் பில்டிங்கிலும் சிறப்பாக செய்யப்படுகிறார் ” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், ” 2008 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான விராட் டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 47 சதங்களும் அடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டிக்கு தயாராகி வருகிறார். மேலும் உள்நாட்டில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக முத்திரை பதிக்க கோலி தீவிரம் காட்டி வருகிறார் ” என்றும் கூறியுள்ளார்.