சீனாவின் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து 655 வீரர்கள் பல்வேறுப் போட்டிகளில் பங்குப் பெற்றுள்ளனர்.
செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டுகள் தற்போது மூன்று நாட்களாக நடைப்பெற்று வரும் நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் கொடுக்கப்படுகிறது. இதுவரை இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பத்தங்கங்களை வென்றுள்ளது.
An exemplary Gold for India.
Congratulations to the 25m Pistol Women Team, comprising @realmanubhaker, @SangwanRhythm and Esha Singh, for their spectacular victory!
Their remarkable teamwork has yielded great results. Best wishes for their future endeavours. pic.twitter.com/piDieqWzpT
— Narendra Modi (@narendramodi) September 27, 2023
இது குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி வெற்றிபெற்ற வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனியே தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.
Another medal in the shooting event at the #AsianGames. Our Skeet Men's Team clinches the BRONZE MEDAL making our nation proud.
Kudos to you all. Keep it up. pic.twitter.com/qmdtDjEXFZ
— Amit Shah (@AmitShah) September 27, 2023
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
WHAT A COMEBACK BY ESHA! 🤯
Hats-off to the 18-year-old @singhesha10 on clinching SILVER 🥈in the Women's 25m Pistol event after a remarkable comeback!
She has left the audience and fans in absolute awe with her scintillating performance today at #AsianGames2022. A memorable… pic.twitter.com/s253RAk8oH
— Anurag Thakur (@ianuragthakur) September 27, 2023
இந்நிலையில் இன்று செய்தியார்களை சந்தித்த மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், “25 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் குழு போட்டியில் ஈஷா சிங் மற்றும் ரிதம் ஆகியோர் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
41 ஆண்டுகள் கழித்து குதிரை ஏற்றத்தில் தங்க வென்றுள்ளோம். மகளிர் கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி தங்க பதக்கம் வென்றுள்ளனர். 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளோம். இந்நிலையினுள் இந்தியா தற்போது பதக்கங்கள் பட்டியலில் 7 ஆம் இடத்தில் உள்ளது. வரும் நாட்களில் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் மேலும் வெற்றி பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்” என கூறினார்.