இந்திய சட்ட ஆணையக் குழு, நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் “இறுதி பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவதற்கு முன், மீண்டும் இந்த விஷயத்தில் விவாதங்கள் மற்றும் ஆய்வு நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” எனும் முறையில் நாடு முழுவதும் மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வர இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.
இதனால் பெருமளவில் பொருள், நேர மற்றும் மனிதவள விரையங்கள் தடுக்கப்படுவதுடன், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முக்கிய முடிவுகளை தொலைநோக்கோடு எடுப்பதற்கும் இது உதவும் என்பதால் இதனை தீவிரமாக ஆளும் பா.ஜ.க. அரசு பரிசீலித்து வருகிறது.
இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர் மட்ட கமிட்டி உருவாக்கப்பட்டது.
செப்டம்பர் 23ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணைய இயக்குனர் என் கே சிங், முன்னாள் மக்களவை பொது செயலாளர் சுபாஷ் கஷ்யப் மற்றும் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் பெற்ற குழுவின் முதல் கூட்டம் நடைப்பெற்றது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் கமிஷனுக்கு ஏற்படும் செலவு கணிசமாகக் குறையும் என்று பாஜக வாதிடும் அதே வேளையில், இந்த நடவடிக்கை ஆளும் ஆட்சிக்கு தேவையற்ற ஆதாயத்தைக் கொடுக்கும் என்றும், இந்திய தேர்தல் செயல்முறையை கணிசமாக சீர்குலைக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
ஆனால் 2018 ஆம் ஆண்டில், நீதிபதி பிஎஸ் சவுகான் (ஓய்வு பெற்றவர்) தலைமையிலான 21 வது சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றும் பரிந்துரைத்தது. இந்திய சட்ட ஆணையக் குழு, நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் “இறுதி பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவதற்கு முன், மீண்டும் இந்த விஷயத்தில் விவாதங்கள் மற்றும் ஆய்வு நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து இந்திய சட்ட ஆணைய அறிக்கை தயார் செய்யும் பணி நிறைபெற்றதாகவும், 2024, 2029-ல் அமல்படுத்த திட்டம் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐந்து மாநிலங்களில் நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல்களும், அதைத் தொடர்ந்து 2024 மே-ஜூன் மாதங்களில் மக்களவைத் தேர்தல்களும் நடைபெறவுள்ளன.
மத்திய அரசாங்கத்தின் சமீபத்திய நகர்வுகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட சில மாநில தேர்தல்களை, மக்களவை தேர்தலுடன் நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.