காஷ்மீர் நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்!
Mar 15, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீர் நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. தலைமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது. இதுகுறித்து கட்சித் தலைமைக்கும் தகவல் வந்தது. இதையடுத்து, அம்மாநில நிர்வாகிகள், ஜி.எம்.மிர், டாக்டர் அலி முகமது மிர், அல்தாப் தாக்கூர், ஆசிப் மசூதி, ஆரிப் ராஜா, அன்வர் கான், மன்சூர் பட் மற்றும் பிலால் பார்ரே ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு முறைக் குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்த நோட்டீஸில், “ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. துணைத் தலைவர் சோபி யூசுப் மீது ஒழுக்காற்றுக் குழு விசாரணை நடத்தியபோது, ​இந்த விவகாரம் ஒழுங்குமுறைக் குழுவின் கவனத்திற்கு வந்தது. கட்சியில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக உங்கள் ஒவ்வொருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளும், ஒழுக்கமின்மைக்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

கட்சியில் உங்களது பதவி மற்றும் உங்களின் கடந்தகால பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு, உங்களின் பாதகமான நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்க ஒழுக்காற்றுக் குழு முடிவு செய்திருக்கிறது. மேலும், ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நீங்கள் வகிக்கும் பதவிகளில் இருந்தும், பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவீர்கள்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, இன்று முதல் ஒரு வாரத்திற்குள் கட்சித் தலைவருக்கு விளக்கத்தை அனுப்பி வைக்கலாம். இந்த அறிவிப்பு வாட்ஸ் ஆப் மூலம் மட்டுமே அனுப்பப்பட்டு வருவதாகவும், தனித்தனியாக அறிவிப்பு செய்யப்பட இயலாது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க. ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக சுனில் சேத்தியும், குழுவின் உறுப்பினர்களாக அசீம் குப்தா மற்றும் ரேகா மகாஜனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: bjpjammu kashmirIssueNotice
ShareTweetSendShare
Previous Post

என்எல்சி – மின் கொள்முதல் ஒப்பந்தம்!

Next Post

2000 ரூபாய் நோட்டை மாற்ற காலக் கெடு நீட்டிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies