நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் நவீன காலத்தில் இந்தியாவிற்கு வெளியே நியூ ஜெர்சியில் கையால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.
நியூஜெர்சியில் ராபின்ஸ்வில்லே என்ற இடத்தில் அசுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில், கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கோர் வாட் கோவிலுக்குப் பின்னர் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோவிலாகஇக்கோவில் கருதப்படுகிறது.
நியூஜெர்சியில் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் அக்டோபர் 8ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. இதையடுத்து அக்டோபர் 18ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிபாடுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இக்கோயில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெளியிட்டுள்ள கடிதத்தில் ”கோயில்கள் பல நூற்றாண்டுகளாக சேவை மற்றும் சமூக-கலாச்சார நடவடிக்கைகளின் மையமாக இருந்து வருகின்றன. அவை பக்தி மையங்கள் மட்டுமல்ல, கலை, கட்டிடக்கலை ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான தளங்களாகவும் செயல்படுகின்றன. இத்தகைய ஆழமான கலாச்சாரக் கோட்பாடுகள் மனிதகுலத்தை வழிநடத்தி வருகின்றன.
தலைமுறைகளாக அக்ஷர்தாம் கோவில் தொடக்க கொண்டாட்டங்கள் இந்தியாவின் கட்டிடக்கலை, புகழ்பெற்ற பண்டைய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டு இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள பரந்த அளவிலான பக்தர்களுக்கு இது ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும்.
கோயில்கள் பல நூற்றாண்டுகளாக சேவை மற்றும் சமூக-கலாச்சார நடவடிக்கைகளின் மையமாக இருப்பதைக் குறிப்பிட்ட அவர், அவை பக்தி மையங்கள் மட்டுமல்ல, கலை, கட்டிடக்கலை சிறப்பு, இலக்கியம் மற்றும் அறிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளங்களாகவும் செயல்படுகின்றன என்றார். இத்தகைய ஆழமான கலாச்சாரக் கோட்பாடுகள் தலைமுறை தலைமுறையாக மனிதகுலத்தை வழிநடத்தி வருகின்றன.
இந்தியாவும் அமெரிக்காவும் நிலையான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், இரு நாடுகளும் இந்த உறவுகளை வலுவான, பன்முக உறவுகளாக வளர்த்து, விரிவுபடுத்தி, தங்கள் மக்களிடையே விரிவான தொடர்புகளை வளர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.