அனைத்துத் தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற கனடாவுக்கு இந்தியா உத்தரவு!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்துத் தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற கனடாவுக்கு இந்தியா உத்தரவு!

அக்டோபர் 10-ம் தேதி கெடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி கொலை விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கும் கனடாவுக்குமான மோதல் முற்றி இருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் அனைத்து தூதரக அதிகாரிகளையும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் திரும்பப்பெற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக, காலிஸ்தான் தீவிரவாதிகள் கூறிவந்தனர். இந்த சூழலில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்கு இந்தியா மறுப்பும், கண்டனமும் தெரிவித்த நிலையிலும்கூட, அந்நாட்டுக்கான இந்தியத் தூதரை வெளியேறுமாறு ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக, இந்தியாவில் உள்ள கனடா நாட்டு உயர் தூதரக அதிகாரியை வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. அதோடு, கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிரது. இதனால் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், அக்டோபர் 10-ம் தேதிக்குள் இந்தியாவில் இருக்கும் அனைத்து கனடா தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். இதன் பிறகு இந்தியாவில் இருக்கும் அவர்களது தூதரகப் பொறுப்புகள் நீக்கப்படும் என்று இந்தியா கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும், இக்கருத்து கூறித்து இந்தியா மற்றும் கனடா வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiaCanadaEnvoys
Share
Tweet
SendShare
Previous Post

நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

டெல்லியில் நிலநடுக்கம்- பொது மக்கள் அச்சம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies