சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலையில் இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கந்த சஷ்டி கவசம் முதல் முறையாக அரங்கேற்றப்பட்ட ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த நிலையில், சென்னிமலையில் இருந்து அரச்சலூர் செல்லும் சாலையில் கத்தக்கொடி காடு என்ற இடத்தில் ஜான் பீட்டர் வீடு வாங்கி கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். குறிப்பாக, ஜெபக் கூட்டங்கள் நடத்துவதும், ஒலிபெருக்கி மூலம் இந்து தெய்வங்களைச் சாத்தான் என அவமதிப்பது எனக் கடந்த 2 வருடங்களாக இதே வேலையைச் செய்து வந்துள்ளார். இதனைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் செய்தும் பலனில்லை.
இந்த நிலையில், மாதம் செப்டம்பர் 17 -ம் தேதி அன்று, வெளியூரிலிருந்து மக்களைத் திரட்டி வந்து ஜெபக்கூடம் நடத்தியுள்ளார். அப்போது, வழக்கம் போல் தனது சேட்டைகளை செய்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூட்டம் நடந்த பகுதிக்குச் சென்ற பாஜகவினர் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினர் கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த நிலையில், கிறிஸ்துவ அமைப்பினர் வலியுறுத்தல் காரணமாகக் கொடுக்கப்பட்ட புகாரின் மீது மட்டும் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்துக்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனிடையே, சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என சென்னிமலையில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, சென்னிமலை முருகனைக் காப்பாற்ற வேண்டி முழக்கமிட்டனர். மேலும், திமுக அரசின் இந்து விரோத செயலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.