சி.பி.ஐ. வசம் தமிழக அமைச்சர்கள் வழக்கு? பீதியில் தி.மு.க.!
Mar 15, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி.பி.ஐ. வசம் தமிழக அமைச்சர்கள் வழக்கு? பீதியில் தி.மு.க.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 21, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க.வினர் பீதியில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் மீது சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல், முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இவற்றில் 3 வழக்குகளில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கீழமை நீதிமன்றங்களை கடுமையாக விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார். இது தி.மு.க.வினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், தி.மு.க. அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு, ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கருப்பையா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், “தமிழகத்தில் தற்போது அமைச்சர்களாக உள்ள ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, பொன்முடி உள்ளிட்ட பலர் மீது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ஆனால், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டவுடன் இவர்கள் மீதான வழக்குகளின் பிடி தளர்ந்து வருகிறது. மேலும், சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தமிழக காவல்துறை தரப்பிலிருந்து சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த மனு, நீதிபதி சூரியகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்திருக்கிறார். இதுதான் தி.மு.க.வினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, தமிழக தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகள் சி.பி.ஐ. வசம் சென்றால், வழக்குகள் நேர்மையாக நடக்கும். இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே, சம்பந்தப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் மட்டுமல்லாது அறிவாலய வட்டாரமும் கலக்கத்தில் இருக்கிறது.

Tags: cbiDMKMinistersCase
ShareTweetSendShare
Previous Post

தேஜஸ் படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு !

Next Post

அல் ஜசீரா தொலைக்காட்சியை மூட இஸ்ரேல் முடிவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies