பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஐயா ஏ.கே. பெருமாள் இருவரையும் பாராட்டிப் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், நாட்டு மக்களோடு நேரடியாகப் பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியை, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் பெருமாபாளையம் கிராம மக்களோடும், பாஜக சகோதர சகோதரிகளோடும் கேட்டு மகிழ்ந்தோம்.
மனதின் குரல் 106 ஆவது நிகழ்ச்சியான… pic.twitter.com/YtlEJLu7KF
— K.Annamalai (@annamalai_k) October 29, 2023
இன்றைய தினம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களோடு நேரடியாகப் பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியை, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் பெருமாபாளையம் கிராம மக்களோடும், பாஜக சகோதர சகோதரிகளோடும் கேட்டு மகிழ்ந்தோம்.
மனதின் குரல் 106 ஆவது நிகழ்ச்சியான இன்று, பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஐயா ஏ.கே. பெருமாள் இருவரையும் பாராட்டிப் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் கலைஞர்களிடம் கலைப்பொருள்கள் வாங்க வேண்டும் என்று நமது பிரதமர் கேட்டுக் கொண்டது, சுற்றுலாத் தலங்கள் நிறைந்த தமிழகத்தில், சிறிய அளவிலான தொழில் முனைவோர்கள், கலைஞர்கள் பலருக்கும் பேருதவியாக அமையும். நிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் இராமலிங்கம், வி. பி. துரைசாமி, மாநில பொதுச் செயலாளர் மற்றும் பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி
மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.