நீலகிரியில் இராணுவத் தளபதி பலியான இடத்தில் நினைவுச் சின்னம்!
Aug 21, 2025, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரியில் இராணுவத் தளபதி பலியான இடத்தில் நினைவுச் சின்னம்!

Web Desk by Web Desk
Oct 29, 2023, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இராணுவத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பலியான இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்க இராணுவ அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லுாரியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முப்படைகளின் தளபதியாக இருந்த பிபின் ராவத், தனது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேருடன் கோவை சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து, இராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

குன்னுார் காட்டேரி அருகே நஞ்சப்பன்சத்திரம் என்கிற இடத்தில் வந்தபோது, கடும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த இராணுவத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த இடத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, அங்கு நினைவுச்சின்னம் அமைக்க இராணுவ அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து வெலிங்டன் இராணுவப் பயிற்சி மைய அதிகாரிகள் கூறுகையில், “இந்திய முப்படைகளின் இராணுவ தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்து விட்டனர்.

அந்த விபத்து நேரிட்டபோது, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மீட்புப் பணியில் இராணுவத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தனர். எனவே, அந்த கிராமத்தை இராணுவம் தத்தெடுத்து நிவாரணப் பொருட்கள் வழங்கியது. மேலும், அக்கிராமத்தில் ஓராண்டுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த இராணுவ அதிகாரிகளை நினைவுகூறும் வகையில், நஞ்சப்பன்சத்திரத்தில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, அப்பகுதியில் இராணுவம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன் எடையில் பளிங்குக் கற்களாலான நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த நினைவுச் சின்னத்தில் உயிர்நீத்த வீரர்கள் பற்றிய விவரங்கள் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றுள்ளது. இந்த நினைவுச் சின்னம் வரும் டிசம்பர் 8-ம் தேதி திறந்து வைக்கப்படும்” என்று கூறினர்.

Tags: accidentHelicopterNilgiriMemorial
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா பேட்டிங் !

Related News

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திய விவகாரம் : வழக்கறிஞர் பாரதிக்கு ஆதரவாக குவிந்த தூய்மைப் பணியாளர்கள்!

கேரளாவில் பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பேத்தி!

ரஷ்யா : ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை!

  97 தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு!

சென்னை : வேல்ஸ் அறக்கட்டளை நிறுவனர் ஐசரி கணேஷ் மீது சகோதரி புகார்!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை : சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெயிலர் 2-வில் இணைந்தார் சுராஜ் வெஞ்சாரமூடு!

முன்னாள் பிரதமர் தேவகவுடா – சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்!

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்  : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கண்டனம்!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் – நிர்மலா சீதாராமன் உறுதி!

முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies