நாட்டின் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வரும் 25 ஆண்டுகள் நாட்டின் எதிர்காலத்திற்கும், மத்திய பிரதேசத்திற்கும், நமது இளைஞர்களுக்கும் மிக முக்கியமானது என்றும், இது இளைஞர்களுடன் சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்றும், மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் தாமோவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
மேடையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,
இந்தத் தேர்தல்கள் வெறும் எம்.எல்.ஏ.க்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அல்ல என்றும், மத்தியப் பிரதேசத்திற்கு புதிய வளர்ச்சி அளிப்பதற்காகவே என்று கூறினார்.
காங்கிரசு என்றால் பொய்க்கு உத்தரவாதம் என்றும், காங்கிரஸின் வரலாறு பொய்களால் நிறைந்தது என்று கூறினார். எப்போதும் காங்கிரசு பொய்யான அறிவிப்புகளையே வெளியிடுகின்றனர் என்றார்.
மக்கள் நலனுக்காக பாஜக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிட்டார். பாஜக அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதால், ஏழைக் குடும்பங்கள் இதுவரை 1 லட்சம் கோடி ரூபாயைச் சேமித்துள்ளதாகக் கூறினார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்படும் வீடுகள் குறித்து பேசியவர், இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றார்.
கிசான் சம்மான் நிதியை குறிப்பிட்டு பேசியவர், பாஜகவின் இரட்டை இயந்திர அரசு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும், அதேசமயம் காங்கிரஸ் கடன் தள்ளுபடி என்ற பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கிறது என்றும் கூறினார்.