ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் சுமார் 55 பயணிகளுடன் பேருந்து ஒன்று படோட் கிஸ்த்வார் Batote-Kishtwar தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அசார் அருகே பேருந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காயம் அடைந்த 19 பேர் அருகில் உளள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலியானோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே பேருந்து விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.