‘பழங்குடியினர் கௌரவ தினத்தில்’ அனைவருக்கும் பிரதமர் மோடி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“பகவான் பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன். இந்தச் சிறப்பான தருணத்துடன் தொடர்புடைய பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.