மும்பை மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் முன்னிலையில் சச்சின் டெண்டுல்கரின் 20 வருட சாதனையை 50 சதங்கள் அடித்ததன் மூலம் முறியடித்துள்ளார் விராட் கோலி.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிற்றது.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது. இந்தத் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி தனது 50 வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கர் முன்னிலையில் சச்சின் டெண்டுல்கரின் 20 வருட சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும் இந்தப் போட்டியில் விராட் கோலி 28 ரன்களை கடந்த போது, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தினார்.
ரிக்கி பாண்டிங் 13704 ரன்கள் அடித்த நிலையில், கோலி அவரை கடந்து அந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.
அடுத்து அரைசதம் அடித்த கோலி ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கரின் 2003 உலகக்கோப்பை சாதனையை முறியடித்தார்.
சச்சின் அப்போது ஏழு முறை 50க்கும் மேல் ரன் குவித்திருந்த நிலையில், விராட் கோலி எட்டாவது முறையாக 2023 உலகக்கோப்பை தொடரில் 50க்கும் மேற்பட்ட ரன் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.