புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!
Oct 26, 2025, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா பகுதி அருகே புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசமாகின.

புதுடெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பீகார் மாநிலத்துக்கு புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயில் வழக்கம்போல நேற்று புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு பீகார் மாநிலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா பகுதி அருகேயுள்ள சாராய்போபட் எனும் இரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, திடீரென இரயிலில் இருந்து புகை வந்தது. இதைக் கண்ட இன்ஜின் டிரைவர், உடனடியாக இரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவசர அவசரமாக இரயிலை நிறுத்தினார்.

பின்னர், இரயிலில் இருந்து பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும், இச்சம்பவத்தில் 4 பயணிகள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இத்தீவிபத்தில் 3 இரயில் பெட்டிகள் எரிந்து நாசமாகி விட்டன.

இத்தீவிபத்து குறித்து எட்டாவா காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறுகையில், “டெல்லியில் இருந்து பீகார் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த இரயிலில் 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். இச்சம்பவத்தில் 4 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், அவை தீக்காயங்களாகத் தெரியவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

அதேசமயம், ஒரு பெட்டியில் மட்டுமே தீப்பிடித்ததாக வட மத்திய இரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வட மத்திய இரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறுகையில், “புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் எஸ்-1 பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதை சாராய்போபட் சந்திப்பில் உள்ள காவலர் கவனித்திருக்கிறார்.

பின்னர், இரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது வரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: Firedelhi-darbhanga express train
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் “சாவ் பர்வா” திருவிழா கோலாகலம்!

Next Post

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies