தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதலே, ஒரு பக்கம் திமுகவினரின் அராஜகம், மறுபக்கம் ஆளும் கட்சியினரின் ஆசி பெற்ற அதிகாரிகள் அராஜகம் என நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த நிலையில்தான், மாற்றுத்திறனாளி பெண் என்றும் மனிதநேயம் கூட இல்லாமல் திமுகவின் ஆசி பெற்ற அரசு அதிகாரிகள் அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.
இந்த நிலையில், சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் மற்றும் ஊழியர்கள் அப்போது, சந்தையை ஆய்வு செய்து கொண்டு இருந்தனர்.
சந்தை நுழைவு வாயில் அருகே 50 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் மாரியம்மாள் என்பவர் கருவாட்டு கடை வைத்திருந்தார்.
அந்த கடை உடனே எடுக்கச் சொல்லி செயல் அலுவர் சேகர் உத்தரவிட்டார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால், ஆவேசம் அடைந்த செயல் அலுவலர் சேகர், மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவாட்டு கடையை தூக்கி எறிந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணிடம் செயல் அலுவலர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக, மாற்றுத்திறனாளி சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில், சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகரை, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம், உரிமைகள் குறித்து அரசு அதிகாரிகள் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மேலும், பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இணைக்க வேண்டும் என்றும் சிறப்பு சட்ட விதியை, திமுக அரசு காற்றில் பறக்கவிட்டதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாகும்.