உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப்பணி நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாள்தோறும் தொடர்பு கொண்டு விசாரித்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் நேற்று இரவு மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசியவர், மீட்புப்பணி மிகவும் சவாலானது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி . குறிப்பாக நமது பிரதமருக்கு மிக்க நன்றி. நாள்தோறும் தொடர்பு கொண்டு மீட்புப்பணி நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். மீட்புப்பணி எவ்வாறு நடைபெறுகிறது என மிக ஆர்வமாக கேட்டறிந்த பிரதமர், அடுத்த என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் பிரதமர் மோடி வழங்கியதாக தெரிவித்தார்.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை எவ்வாறு ஊக்குவிப்பது என்பது குறித்து பிரதமர் விளக்கியதாகவும், அவரது தொடர்ச்சியான வழிகாட்டுதலின் காரணமாக இந்த பணியை செய்ய முடிந்ததாகவும் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் முயற்சியின் காரணமாக நாடு முழுவதும் இருந்து அனைத்து இயந்திரங்களும் வந்தன, வல்லுநர்கள் வந்தனர், உலக நிபுணர்கள் வந்ததாகவும் என அவர் கூறினார்.
மேலும் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டுவிடலாம் என நினைத்து போது ஒன்றன்பின் ஒன்றாக தடைகள் வந்ததாகவும், நீண்ட முயற்சிக்கு பின்னர் மீட்புப் பணி வெற்றி பெற்றதாக அவர் கூறினார்.
















