இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாள் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 பந்துகளில் 6 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி அசத்தினார். அவர் 57 பந்துகளில் 123 ரன்களைக் குவித்தார். சூர்யகுமார் 39 ரன்களும், திலக் வர்மா 31 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 222 ரன்களைக் குவித்தது.
இதனை அடுத்து, ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக, டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி ஆகியோர் களமிறங்கினர்.
ஆரோன் ஹார்டி 16 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 35 ரன்களிலும் வெளியேறினர். மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். அடுத்து ஜோஷ் இங்கிலிஸ் 6 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 17 ரன்னிலும், டிம் டேவிட் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்களைக் குவித்தார்.
20 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து, 225 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.