மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,
இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு தேவையான அரிசி அல்லது கோதுமையை பொது வினியோகத்துறை மூலமாக மத்திய அரசுதான் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது!
தமிழக மாநில நிர்வாகத்தை பொறுத்த மட்டில், கிலோவுக்கு ரூபாய் 2 ஐ, போக்குவரத்து கட்டணமாக பெற்றுக்கொண்டு வழங்கி வருகிறது! தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் அரிசி கோதுமையை அதிக ஆதாரவிலையில் வாங்கிக்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டு, அப்படி வாங்கப்படும் அரிசியை மக்களுக்கே இலவசமாக வழங்கிவருகிறது மத்திய அரசு!
இன்னிலையில் 2019 டிசம்பரில் சீனாவில் துவங்கிய கொரோனா உலகம் முழுமையும் பரவிய நிலையில், மக்கள் அன்றாடம் பணிகளை கவனிக்க இயலாத நிலை ஏற்பட்டதால், வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டதால், பிரதமர் நரேந்திரமோடி, ஜனவரி 2020 முதல் கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமையையும், ஒரு கிலோ பருப்பையும் நாட்டின் 80 கோடி மக்களுக்கு வழங்கி வருகிறார்! கொரோனா பாதிப்பு நீங்கியபின்பும் இந்த கூடுதல் இலவசம் நீடித்துவந்தது!
நீடிப்பு அறிவிப்பு டிசம்பர் 30 2023 ல் நிறைவுபெறும் நிலையில், 28-11-2-23 அன்று பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கூடிய மத்திய மந்திரிசபை, கூடுதல் இலவச தானியமாக 80 கோடி மக்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது!
இது நாட்டில் வளர்ச்சியை காட்டுகிறது! முன்னேறிய நாடுதான் இத்தகைய இலவச வழங்கலை நாட்டுக்கு வழங்க இயலும்! பிரதமர் நரேந்திரமோடி அவர்களும் பாரதிய ஜனதாகட்சியும் மக்கள் மீது வைத்திருக்கும் கூடுதல் அக்கரையையும் இந்த அறிவிப்பு உணர்த்துகிறது!
நாட்டுமக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர்!