இன்று நடைபெறும் இந்தியா, ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் இரண்டு வீரர்களை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
முதல் மூன்று போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், நான்காவது போட்டிக்கு முன்னதாக அணிக்கு திரும்பியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயருக்காக இந்திய அணியில் இரண்டு மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாவதாக களமிறங்குவார். தற்போது இந்திய அணியில் மூன்றாம் இடத்தில் களமிறங்குவது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இஷான் கிஷன்.
ஆகையால் கடந்த மூன்று போட்டிகளில் விளையாடி வந்த இஷான் கிஷனை நீக்க முடிவு செய்துள்ளது இந்திய அணி நிர்வாகம். இவர் முதல் மூன்று போட்டிகளில் அரைசதம் எடுத்திருந்தார். இருப்பினும் இஷான் கிஷனை நீக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் என்பதால் அவரை நீக்கினால், மாற்று விக்கெட் கீப்பரை அணியில் சேர்க்க வேண்டும். அதனால், ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன் திலக் வர்மாவை நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட உள்ளார்.
இப்படி இரண்டு மாற்றங்களை செய்வதற்கு பதிலாக இஷான் கிஷனை ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய வைக்கலாம் என்றாலும், ஏதோ ஒரு காரணத்தால் இஷான் கிஷன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் தவிர பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு தீபக் சாஹர் அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.
பிரசித் கிருஷ்ணா தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகிறார் என்பதால் அவரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் குமார் அணிக்கு திரும்பி இருப்பதால் மூன்றாவது போட்டியில் மட்டும் விளையாடிய ஆவேஷ் கான் நீக்கப்படுவார் என்ற தகவலும் வந்துள்ளது.