இந்திய அணியில் மாற்றங்கள் - சாதகமா, பாதகமா ?
Sep 20, 2026, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணியில் மாற்றங்கள் – சாதகமா, பாதகமா ?

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 01:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று நடைபெறும் இந்தியா, ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது  போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் இரண்டு வீரர்களை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

முதல் மூன்று போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், நான்காவது போட்டிக்கு முன்னதாக அணிக்கு திரும்பியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயருக்காக இந்திய அணியில் இரண்டு மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாவதாக களமிறங்குவார்.  தற்போது இந்திய அணியில் மூன்றாம் இடத்தில்  களமிறங்குவது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இஷான் கிஷன்.

ஆகையால் கடந்த மூன்று போட்டிகளில் விளையாடி வந்த இஷான் கிஷனை நீக்க முடிவு செய்துள்ளது இந்திய அணி நிர்வாகம். இவர் முதல் மூன்று போட்டிகளில் அரைசதம் எடுத்திருந்தார். இருப்பினும் இஷான் கிஷனை நீக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் என்பதால் அவரை நீக்கினால், மாற்று விக்கெட் கீப்பரை அணியில் சேர்க்க வேண்டும். அதனால், ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன் திலக் வர்மாவை நீக்கி  விட்டு, அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட உள்ளார்.

இப்படி இரண்டு மாற்றங்களை செய்வதற்கு பதிலாக இஷான் கிஷனை ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய வைக்கலாம் என்றாலும், ஏதோ ஒரு காரணத்தால் இஷான் கிஷன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் தவிர பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு தீபக் சாஹர் அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.

பிரசித் கிருஷ்ணா தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகிறார் என்பதால் அவரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் குமார் அணிக்கு திரும்பி இருப்பதால் மூன்றாவது போட்டியில் மட்டும் விளையாடிய ஆவேஷ் கான் நீக்கப்படுவார் என்ற தகவலும் வந்துள்ளது.

Tags: Shreyas IyerCricketIndiaAustraliat20 cricketRaipurIshan Kishan
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மாநகரம் மழையில் மிதப்பதற்கு திமுக, அதிமுகவே காரணம்!

Next Post

பிஎஸ்எஃப் நிறுவன தினம்! – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies