போலி வாக்குறுதிகள் அளிப்பது காங்கிரசார் பழக்கம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்து நடந்த தேர்தல்களில், ஆளுங்கட்சி வெற்றி பெற்றதே இல்லை . ராஜஸ்தானை பா.ஜ.கா கைப்பற்றுகிறது என தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் போலி வாக்குறுதிகள் அளிப்பது காங்கிரசார் பழக்கம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ” ராஜஸ்தானின் கொள்ளையடிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து மக்கள் விடுவிக்கப்படுவார்கள். போலி வாக்குறுதிகள் அளிப்பது காங்கிரசார் பழக்கம்.
ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளாக, ராகுல் போலி வாக்குறுதிகளை அளித்தார். நாங்கள் காங்கிரசார் செய்த ஊழலை அம்பலப்படுத்தினோம். மக்களின் விருப்பப்படி பாஜ.கா நாளை ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.