நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 22இல் முடிவடைகிறது.
கூட்டத்தொடரை சுமூகமகா நடத்துவது தொடர்பாக டிசம்பர் 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் 19 நாட்களுக்கு 15 அமர்வுகளைக் கொண்டதாக அமையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
இந்த கூட்டத்தொடரில் உத்தேசமாக 19 சட்ட மசோதாக்கள் மற்றும் 2 நிதி மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவாதிக்கப்படும் மசோதாக்களின் பட்டியல் :
I – சட்ட மசோதா அலுவல்கள்:
1. ரத்து மற்றும் திருத்த மசோதா- 2023, மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டது.
2. வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா – 2023 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
3. பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா – 2023 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
4. அரசியலமைப்பு (ஜம்மு காஷ்மீர்) பட்டியல் சாதிகள் உத்தரவு (திருத்தம்) மசோதா – 2023.
5. அரசியலமைப்பு (ஜம்மு-காஷ்மீர்) பட்டியல் பழங்குடியினர் ஆணை (திருத்தம்) மசோதா – 2023.
6. ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா – 2023.
7. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா – 2023.
8. பாரதிய நியாய சன்ஹிதா – 2023 எனப்படும் இந்திய நீதித்துறை சட்ட மசோதா – 2023.
9. பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா – 2023 எனப்படும் இந்திய குடிமைப் பாதுகாப்புச் சட்ட மசோதா.
10. பாரதிய சாக்ஷய அதினியம், 2023 எனப்படும் இந்திய சாட்சியச் சட்ட மசோதா.
11. தபால் அலுவலக மசோதா – 2023.
12. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா – 2023.
13. கொதிகலன்கள் மசோதா – 2023.
14. இடைக்கால வரி வசூல் மசோதா – 2023.
15. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (இரண்டாவது திருத்தம்) மசோதா – 2023.
16. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா – 2023.
17. யூனியன் பிரதேசங்களின் அரசு (திருத்த) மசோதா – 2023.
18. டெல்லியின் தேசிய தலைநகரப் பகுதி சட்டங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) இரண்டாவது (திருத்த) மசோதா – 2023.
19. மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா – 2023.
II – நிதி மசோதா நடைமுறைகள்:-
1. 2023-24 ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கைகளின் முதல் தொகுதி சமர்ப்பித்தல், விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்
2. 2020-21 ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானியக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல், விவாதித்தல் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துதல், பரிசீலனை செய்தல் மற்றும் நிறைவேற்றுதல்.
இதில் 18 சோதாக்கள் உள்பட முக்கிய அலுவல்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது.