பெருமழை விவகாரத்தில், போலி வீடியோ வெளியிட்டதாக, ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் மீது பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளதோடு, அவரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணாக, சென்னையில் பெருமழை கொட்டித்தீர்த்தது. இரண்டு நாட்களுக்கு மேலாக, விடியவிடிய பெய்த பெருமழை பொது மக்களுக்கு மரண பயத்தை காட்டியது. வரலாறு காணாத பெருமழையால் சென்னையின், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், வட சென்னை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பெரும்பாலான இடங்கள் மழைவெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பல இடங்களில் இன்னும் மின்சாரம் முழுமையாக வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் பொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை ஒன்று ஒரு வீடியோ ரிலீஸ் செய்துள்ளார் திமுக எம்எல்ஏ எழிலன். அது பெருமழை பெய்வதற்கு முன்பு, ஒரு சில மாதங்களுக்கு எடுக்கப்பட்ட வீடியோ என்பதால் ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் செம்ம கடுப்பில் இருக்கிறார்கள்.
இந்த வீடியோவை திமுக ஆதரவு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்துள்ளதால், மேலும் ஆவேசத்தில் உள்ளனர். இதனால், டாக்டர் எழிலன் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.