தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர் கூட்டம் இன்று நடைபெற்றது.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜக முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
அதன்படி 39 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற பொறுப்பாளர் கூட்டம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.