திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜக நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் என்பவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து அவமரியாதையாகப் பேசியும், சமூக வலைதளங்களில் இழிவாகப் பதிவு செய்து வருவதாக பாஜகவினர் புகார் தெரிவித்திருத்தனர்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டனை கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் பாரதீய ஜனதா கட்சியினர், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, போலீசார் தடையை மீறி ஒரு சில பாஜகவினர் காங்கிரஸ் அலுவலகம் அருகே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து அவமரியாதையாகப் பேசியும் சமூக வலைதளங்களில் இழிவாகப் பதிவு செய்யும் மணிகண்டனை கைது செய்யும் வரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என உறுதியுடன் உள்ளனர். இதனால், திண்டுக்கல்லில் பதற்றம் நிலவி வருகிறது.