சண்டிகரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையில் நேற்று தோல் வங்கி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை இந்த நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விவேக் லால் திறந்து வைத்தார்.
தோல் வங்கி என்பது உயிரிழந்த நபர்களின் உடலின் தோலைத் தானமாக அளிப்பதற்கான ஒரு வங்கியாகும். இது தீக்காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும்.
உடலின் தோலை இறந்த ஆறு மணி நேரத்திற்குள் தானம் செய்யலாம் என்ற நிலையில், பதப்படுத்தப் பட்ட பிறகு தீக்காயங்கள் மற்றும் படுகாயங்களுக்கு சிகிச்சையளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.
மகாராஷ்டிராவில் ஏழு, சென்னையில் நான்கு, கர்நாடகாவில் ஒன்று, மத்தியப் பிரதேசம் மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களில் மூன்று என மொத்தம் 16 தோல் வங்கிகள் நாட்டில் உள்ளன. தற்போது சண்டிகரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையில் நேற்று தோல் வங்கி ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
மேலும் தீக்காய பராமரிப்பு மற்றும் தோல் வங்கியில் முன்னேற்றங்கள் ” என்ற தலைப்பில் இந்நிகழ்வானது நடத்தப்பட்டது. தீக்காய துறையில் உள்ள முன்னணி நிபுணர்கள், புதுமையான அறுவை சிகிச்சை நுட்பங்கள் முதல் தீக்காயங்களுக்குப் பிறகு வரும் மறுவாழ்வு முன்னேற்றம் வரை தீக்காய மேலாண்மையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.