இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 09:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிரியா எல்லை அருகே இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவரின் மகன் உட்பட 4 பேர் உயிரிழந்தார்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் கொல்லப்பட்டனர். 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரில் காஸா நகரின் வடக்குப் பகுதியே உருக்குலைந்து கிடக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 17,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

அதேசமயம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் மற்றும் சிரியாவிலுள்ள தீவிரவாத அமைப்புகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

அந்த வகையில், சிரியா எல்லைக்கு அருகே இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றது. இதையடுத்து, இஸ்ரேல் ஆளில்லா விமானம் மூலம் பதிலடித் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவரின் மகன் ஹசன் அலி டக்டோக் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் ஒருவர் சிரியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. தாக்குதலில் பலியான ஹசன் அலி டக்டோக் தெற்கு சிரியாவில் பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பதாகக் கூறப்படும் அலி முசா டக்டோக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IsraelDrone attackHizbulla
Share
Tweet
SendShare
Previous Post

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

Next Post

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies