அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதில், குறிப்பாக நீர் நிலைகளுக்கு மிக அருகில் உள்ள வீடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வீட்டில் உள்ள பொருட்கள் மழைநீரில் சேதமடைந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னை பார்த்திராத அளவுக்குக் கடும் சேதங்களை மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.