வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் ரூ. 6000 நிவாணத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.குடிநீர், உணவு கிடைக்காமல் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பிரிட்ஜ், வாஷிங் மெசின், டிவி, கட்டில், மெத்தை வெள்ளத்தில் மிதந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் நிலைமை ஓரளவு சீரடைந்து வந்தாலும், குடியிருப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீரை அகற்ற போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
மேலும் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டரேசன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரூ. 6000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
ஆனால் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அதில் பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பெரும்பாலான ஹவுஸ் ஓனர்கள் கீழ்தளத்தில் உள்ள வீடுகளையே வாடகைக்கு விடுகின்றனர். முதல் தளத்தில் அவர்கள் தங்கிக்கொள்கின்றனர்.
சென்னை வெள்ளத்தின் போது அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டது கீழ் தளத்தில் வசிப்பவர்கள் தான். ஆனால் அவர்களுக்கு ரேசன் கார்டு இல்லாததால் நிவாரணத்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
சென்னையில் வசிக்கும் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என பல்வேறு ஊடகங்க்ள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், ரேசன் கார்டு இல்லாதவர்கள் அரசிடம் முறையீடு செய்யலாம் என்றும், வேறு ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்கலாம் என மழுப்பலாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்படாத பல ரேசன் அட்டை தாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசு, உண்மையாக பாதிக்கப்பட்ட ரேசன் கார்டு இல்லாதவர்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே சென்னை வசிக்கும் ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக விரிவான செய்திக்குறிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.