டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் பிரச்சாரம் 2.0 இன் கீழ் 1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்க்கையை எளிதாக்க மதா்திய அரசு உரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பணியாளர் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
புது தில்லியில் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் பிரச்சாரம் 2.0 இன் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் போது டாக்டர் சிங் இவ்வாறு கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சிங், கடந்த மாதத்தில் நாடு தழுவிய டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் பிரச்சாரம் 2.0 இன் கீழ் ஒரு கோடியே பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
ஓய்வூதியதாரர்களுக்கான கொள்கையில் சீர்திருத்தங்களை செய்த பிறகு, வயதான குடிமக்கள் வீட்டு வாசலில் சேவைகளைப் பெறுகிறார்கள் என்று கூறினார்.
ஓய்வூதியம் பெறுவோருக்கு டிஜிட்டல் அதிகாரமளிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்தப் பிரச்சாரம் செயல்படுத்தியதாக டாக்டர் கூறினார்.
பிரச்சாரத்தின் போது, 38 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டன, அதில் முக அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம். நூறு நகரங்களில் 597 இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது எனத் தெரிவித்தார்.