சென்னை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மழை வெளுத்து வாங்கியது.
பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின. இந்நிலையில் வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்தியக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றனர்.
முதலில் சென்னை பட்டாளம் டிமெல்லோஸ் சாலையில் வெள்ள பாதிப்புகளை அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் வடசென்னை, தென்சென்னை, வேளச்சேரி கல்வி நகர், ஏஜிஎஸ் காலணி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.