நாடாளுமன்றத்தில் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய மைசூர் மனோரஞ்சன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பை சேர்ந்தவன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவன் எஸ்எப்ஐ (SFI) கூட்டத்தில் உரையாற்றும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மக்களவையில் நேற்று பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இரண்டு இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதனையடுத்து அந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய பெண் உட்பட இருவா் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் பின்புலம் குறித்து விசாரணையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மனோரஞ்சனின் தந்தை தேவராஜ் கவுடாவிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். எங்கள் குடும்பம் விவசாய பின்னணி கொண்டது. என் மகன் மனோரஞ்சன் இன்ஜினியரிங் படித்து உள்ளார். தற்போது, அவருக்கு 35 வயது ஆகிறது. அவர் என்ன செய்திருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. என் மகன் தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள் என்று தேவராஜ் கவுடா தெரிவித்தார்.
இதனிடையே மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. அவன் எஸ்எப்ஐ (SFI) கூட்டத்தில் உரையாற்றும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.