பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் காபந்து அரசாங்கம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (HSD) விலைகளை முறையே பாகிஸ்தான் ரூபாய் (PKR) 14 மற்றும் PKR 13.5 ஆகக் குறைத்துள்ளது.
பாகிஸ்தான் நிதி அமைச்சகத்தின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, பெட்ரோலின் புதிய விலைகள் PKR 267.34 மற்றும் PKR 276.21 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் மற்றும் லைட்-டீசல் எண்ணெய் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜந்து சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சிறிதளவு உயர்ந்துள்ளது, இதன் விளைவாக நுகர்வோரின் உள்நாட்டு விலைகளில் வீழ்ச்சியடைந்துள்ளன.
டிசம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 21 மில்லியன் டாலர் அதிகரித்து 7.04 பில்லியன் டாலராக இருந்ததாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.