சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என்பது காலத்தால் அழியாத ஒரு பொக்கிஷம். அதை அபகரிக்க ஒரு கும்பல் தீவிரமாக வேலை செய்து வருகிறது என கதறுகிறார்கள் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர்கள்.
மார்டன் தியேட்டர்ஸ் சேலத்தின் அடையாளம் என்பதைவிட தமிழ்நாட்டின் மிகப்பெரும் அடையாளமாக அன்று இருந்தது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, அதாவது 1930 – ம் ஆண்டு நிறுவப்பட்டது தான் இந்த மாடர்ன் தியேட்டர்ஸ். இதன் நிறுவனர் ராமசுந்தரம்.
இவர் வெளிநாட்டில் படித்ததால், சினிமா மீது காதல் கொண்டார்.
இதன் காரணமாக, வெளிநாட்டிலேயே திரைப்படம் தொடர்பாக பலவும் கற்றுக் கொண்டார். அன்றைய காலத்தில், சினிமா தயாரிப்பு என்பது கொல்கத்தாவில் மட்டுமே கொடிக்கட்டி பறந்த நிலையில், சென்னையிலும் கொண்டு வர முடிவு செய்தார். விளைவு, திரைப்பட நிபுணர்களையும் தொழில்நுட்பங்களையும் சேலத்திற்கு கொண்டு வந்து தமிழ்நாட்டிற்கு சினிமா வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளமிட்டார்.
1940-ல் உத்தமபுத்திரன் என்ற பேசும் படத்தை முதன் முதலில் தயாரித்து வெளியிட்டு வியக்க வைத்தது மாடர்ன் தியேட்டர்ஸ். சேலம் ஏற்காடு சாலையில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டர்ஸ். தமிழ் சினிமா உலகில் அன்றைய சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்த பி.யு. சின்னப்பா, எம்ஜிஆர், டி.ஆர்.ராஜகுமாரி, வி.என்.ஜானகி, கண்ணதாசன் என நுழைவு வாயிலில் காலடி படாத திரை உலக நட்சத்திரங்களே கிடையாது.
1963-ல் ராமசுந்தரம் மறைந்த நிலையில், அவரது மகன் விஜயவர்மா நிர்வாகத்தை ஏற்றார். காலப்போக்கில் திரைப்படத் தொழில் தாண்டி மற்றவைகளிலும் கவனம் செலுத்தினார். இந்த நிலையில், சேலம் சென்ற திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு செல்பி எடுத்தார்.
அதற்கு ஒரு காரணம் இருக்க, அங்கு கருணாநிதி சிலை வைக்க திமுக அரசு முயற்சி செய்வதாக சேலம் மார்டன்ஸ் தியோட்டர்ஸ் உரிமையாளர் விஜயவர்மா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், திமுகவின் பொய் முக்கத்திரையை கிழித்தெடுத்தாா். இதனிடையே, சமூக வலைதளங்களில் செல்பி எடு நிலத்தை ஆட்டையப்போடு என ஹேஸ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.