இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அட்டகாசமாக பந்துவீசி வந்தனர். தென் ஆப்பிரிக்கா 28 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்களை எடுத்தார். இதுவே இந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்றால் இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வாறு இருந்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 10 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல் ஆவேஷ் கான் 8 ஓவர்கள் பந்துவீசி 27 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
குலதீப் யாதவ் 2.3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 3 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதல் முறையாக 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியில் உள்ள ஒரே இடதுகை வேகபந்துவீச்சாளரான அர்ஷிதீப் சிங் உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்.
அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் பவர் பிளே ஓவர்களில் பந்துவீசி வந்த அர்ஷ்தீப் சிங், சரியான ஸ்விங் கிடைக்காமல் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வந்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த போது, அர்ஷ்தீப் சிங்கே இதனை ஏற்றுக் கொண்டார்.
எனது திறமைக்கேற்ப நான் சிறப்பாக விளையாடவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் 5 விக்கெட்களை வீழ்த்தியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.