கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்தாலும் சுசீந்திரம் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடிந்து செல்லாததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதியடைந்து உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, வீடுகளில் வசிப்போர், மேல் மாடியில் தங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது.
இன்று காலை முதல் மழை பெய்யாத நிலையிலும் வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடியவில்லை. இதனால் வீடுகளின் மேல் மாடியில் தங்கி உள்ள குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
அவர்களை மீட்டு வருவதற்கு காவல் துறையினர் படகு வசதி செய்தாலும் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை அப்படியே வைத்து விட்டு வெளியேற தயங்குகின்றனர்.
இதனால் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை படகுகளில் கொண்டு சென்று வழங்கப்பட்டு வருகிறது.
விரைவில் தண்ணீர் வடிந்து செல்லும் என்று வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் தங்கியிருக்கும் மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.