அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அமெரிக்க கோவில்கள் நேரடி ஒளிபரப்புடன் கண்கவர் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது, இந்த பிரமாண்ட விழாவுக்காக அமெரிக்கா முழுவதும் உள்ள கோவில்கள் ஒரு வார கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.
அமெரிக்காவில் உள்ள 1,100க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்து கோவில் கவுன்சில் (HMEC), ஜனவரி 15 முதல் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட தொடர் கொண்டாட்டங்களைத் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க இந்து கோவில்கள் அமைப்பின் (HMEC) செய்தித்தொடர்பாளர் தேஜல் ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எங்கள் கனவு கோவில் நனவாகி வருகிறது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பது எங்கள் அதிர்ஷ்டம். அனைவரும் பகவான் ஸ்ரீராமரை அவரது மந்திரில் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்தியர்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
அமெரிக்க நேரப்படி அடுத்த ஆண்டு ஜனவரி 21 இரவு 11 மணி அளவில், பகவான் ஸ்ரீராமரின் பிராண பிரதிஷ்டையை கொண்டாட, அந்த இரவில் நாங்கள் ஒன்று சேருவோம்.
வட அமெரிக்கா முழுவதும் உள்ள சாமியார்களால் ஸ்ரீ ராம் நாம சங்கீர்த்தனம் கோஷமிடப்படும். ஜனவரி 21-ம் தேதி, கோவில்களில் சுற்றுப்புறத்தை வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்யவும், திறப்பு விழாவை நேரடியாக ஒளிபரப்பவும், சங்கு முழங்கவும், பிரசாதம் விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.