தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் ஆய்வு நடத்துகிறார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசமபர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர்நிலைகள் நிரம்பின. கொட்டித்தீர்த்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மழை பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறு நாள் ஆய்வு செய்கிறார்.
வெள்ள பாதிப்பு மற்றும் வெள்ள நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்துகிறார்.