திருச்சியில் இன்று தமிழக பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா,புதிய விமான முனைய திறப்புவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வருகை தந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாஜக செயற்குழுக்கூட்டம் திருச்சி பால்பண்ணை புஷ்பம் மகாலில் நடைபெறுகிறது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அப்போது 2024 நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது