கோவையில் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் சிறு தொழில் கடன் உதவி பயனாளிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமது X பதிவில், கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியில், இன்றைய தினம் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பல்வேறு வங்கிகளின் சார்பில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு தொழில்களுக்கான கடன் உதவி, கிசான் கடன் உதவி, நெசவாளர் கடன் அட்டை, சாலையோர வியாபாரிகளுக்கான #PMSvinidhi திட்டம் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியில், இன்றைய தினம் நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பல்வேறு வங்கிகளின் சார்பில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு தொழில்களுக்கான கடன் உதவி, கிசான் கடன் உதவி, நெசவாளர் கடன் அட்டை, சாலையோர… pic.twitter.com/zqAPhQtdiX
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 8, 2024
மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிகள் மகளிருக்கும், சுய உதவி குழுவினருக்கும், விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் எந்தவித பிற பிணையும் இல்லாமல் மோடி அரசின் உத்தரவாதத்தோடு வழங்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் பாரத பிரதமர் கலந்து கொண்ட “வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய யாத்திரை” நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை பொதுமக்களோடு இணைந்து கலந்து கொண்டேன்.
இதனை அடுத்து, மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டர்களை பொதுமக்களிடம் வழங்கினேன் என குறிப்பிட்டுள்ளார்.