கர்நாடகா கோலாரில் ஸ்ரீ ராமர் பேனரை கிழித்த தெருவோர வியாபாரி ஜாகீர்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா கோலாரில் “அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காகவும், சங்கராந்தி பண்டிகைக்காகவும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலையில் பேனர்கள் கிழிக்கபட்டிருந்தது.
இதனையடுத்து இந்து அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்து போராடினார்கள்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு, அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தது. இதில் செவ்வாய் கிழமை 10.45 மணியளவில் ஜஹாங்கீர் மொஹல்லா கூர்மையான பொருட்களை பயன்படுத்தி பேனர்களை வெட்டியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் தெருவோர வியாபாரி ஜாகீர்கானை (22) கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தனர்.முல்பாகல் டவுன் காவல் நிலையம் முன்பு இந்துக்கள் மாபெரும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.