குடியரசு தின விழா அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி இடம் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குடியரசு தின அணிவகுப்பு டில்லியில் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லி ராஜ்பாத் எனப்படும் கர்தவ்யா பாதையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் நடைபெறுவது வழக்கம்.
இதில் இந்திய ராணுவத்தின் வலிமை, கலாச்சாரம், இதுவரை அரங்கேறிய சாதனைகள் இந்த அணிவகுப்பில் இடம் பெறக்கூடும். மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேதங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களில் உள்ள சாதனைகள் குறித்து அலங்கார ஊர்தி அணி வகுப்பு நடைபெறும்.
இந்தாண்டு உத்தர பிரதேச மாநிலம் சார்பில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம், பால ராமர் பிராண பிரதிஷ்டை தொடர்பான அலங்கார ஊர்தி இடம்பெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அணிவகுப்பு பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களில் செயற்கை நுண்ணறிவின் (AI) ஈடுபாடு மற்றும் பயன்பாட்டை வெளிப்படுத்தும் என தெரிகிறது.
இந்த முறை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் காட்சிப்படுத்தும் அட்டவணையில் முக்கியமாக AI அடிப்படையிலான தொழில்நுட்பம் மற்றும் AI எவ்வாறு பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்பது இடம்பெறும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக இயக்குநர் ஜே.எல்.குப்தா தெரிவித்துள்ளார்.