இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக இந்திய கடற்படையினர் அண்டார்டிகாவில் தேசியக் கொடி மற்றும் கடற்படை சின்னங்களை ஏற்றினர்.
இந்தியாவில் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபரான இம்மானுவேல் மேக்ரான், பாரத பிரதமர் மோடியுடன் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்நிலையில் நேற்று 75வது குடியரசு தினத்தை இந்திய கடற்படை அண்டார்டிகாவில் கொண்டாடியது. கடற்படை வீரர்கள், இந்திய கடற்படை ஹைட்ரோகிராபிக் துறை (INHD) குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் பாரதி ஆராய்ச்சி நிலையத்தில் விழாவை கொண்டாடினர்.
இந்த விழாவைக் குறிக்கும் வகையில் ஆராய்ச்சி நிலையத்தில் தேசியக் கொடி மற்றும் கடற்படை சின்னங்களை ஏற்றினர். இதுகுறித்து இந்திய கடற்படை, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த பதிவில், ” அண்டார்டிகாவில் 2024 குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம், நாட்டின் தொலைதூரத்தில், இந்திய கடற்படையின் செயல்பாட்டு திறனை வெளிப்படுத்துகிறோம்” என தெரிவித்துள்ளனர்.
மேலும், “பாரதி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள லெப்டினன்ட் சிடிஆர் ரிஷப் ராவத் மற்றும் மன்ஜீத் பிஓ (HY) ஆகியோர் அடங்கிய இந்திய கடற்படை ஹைட்ரோகிராஃபிக் துறையின் இந்திய கடற்படையின் ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுக் குழு மூவர்ணக் கொடியை ஏற்றியது ” என பதிவிட்டுள்ளனர்.
Celebrating #RepublicDay2024 in Antarctica, showcasing operational prowess in distant waters#IndianNavy's Hydrographic survey team from the Indian Naval Hydrographic Department, comprising Lt Cdr Rishabh Rawat & Manjeet PO(HY) at Bharati Research Station hoisted the tricolor🇮🇳. pic.twitter.com/qMopq8HN48
— SpokespersonNavy (@indiannavy) January 26, 2024