மக்களவை தேர்தல்: வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர் தெரியுமா?
Sep 20, 2026, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவை தேர்தல்: வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர் தெரியுமா?

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 11:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 96 கோடி மக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அடுத்த சில மாதங்களில், மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்தும், பிரச்சாரம் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றன.

தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. முக்கியமாக, மக்களவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் 47 கோடி பெண் வாக்காளர்கள் உட்பட 96 கோடிக்கும்  மேற்பட்ட வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில், 1 கோடியே 73  லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 18,19 வயதைச் சேர்ந்தவர்கள். மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 18 லட்சம் பேர் உள்ளனர்.

வருகிற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சுமார் 1 கோடியே 50 லட்சம் பணியாளர்கள் வாக்குப்பதிவுக்காக பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 91 கோடியே 20 லட்சமாக இருந்தது. இந்தியாவில் கடந்த 1951-ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில், சுமார் 17 கோடியே 32 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர். இது 1957-ல் 19.37 ஆக அதிகரித்தது.

Tags: 2024 Lok Sabha polls96 Crore Citizens47 Crore WomenEligible To Cast Vote
Share
Tweet
SendShare
Previous Post

அண்டார்டிகாவில் பறந்த இந்திய தேசிய கொடி !

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies